உத்தரமேரூரில் வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் விநியோகம்

காஞ்சிபுரம், அக்.23:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் வனத்துறை சார்பில் இலவசமாக தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு அதிக வருவாய் தரக்கூடிய மரக்கன்றுகளை விநியோகித்து வருவதாக வனச்சரகர் எஸ்.ராம்தாஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.



இது குறித்து உத்தரமேரூர் வட்டார வனச்சரகர் எஸ்.ராம்தாஸ் மேலும் கூறியதாவது..

உத்தரமேரூர் அரசுப்பேருந்து பணிமனை எதிர்புறத்தில் வனத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இங்கு கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலைகள்,விவசாயிகளுக்கு இலவசமாக அதிக வருவாய் தரக்கூடிய மரக்கன்றுகளை விநியோகித்து வருகிறோம்.

தேக்கு, வேங்கை, செம்மரம், மகாகனி போன்ற மரக்கன்றுகள் ஏராளமாக இலவசமாக வழங்க தயார் நிலையில் உள்ளன. 

மரக்கன்றுகள் தேவைப்படுவோர் ஆதார் அட்டை நகல்,பட்டா நகல், பாஸ்போட் அளவு புகைப்படம்,வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியனவற்றைக் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments