பெரிய காஞ்சிபுரம் செங்கழு நீரோடையில் உள்ள பெரிய காஞ்சிபுரம் தர்காவின் திரு சந்தனக்கூட உருஸ் உற்சவம் திருவிழா
திரளான முஸ்லிம் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 638 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி அடைந்து எல்லா மதத்தினராலும் போற்றப்பட்டு, தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அனுதினமும் அருளாசி வழங்கி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஹஜ்ரத் காஜா சையத் ஷாஹ் ஹமீதுத்தீன் அவுலியா பாதுஷா சிஷ்தி தர்கா எனப்படும் பெரிய காஞ்சிபுரம் செங்கழு நீரோடையில் உள்ள பெரிய காஞ்சிபுரம் தர்காவின் திரு சந்தனக்கூட உருஸ் உற்சவம் திருவிழா இன்று முதல் தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருச் சந்தனக்கூடு உற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
கொடியேற்ற விழாவிற்காக ஓலிமுகமது பேட்டை பகுதியில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருக்கொடி பேண்ட் வாத்தியங்கள் மேளதாளங்கள் பட்டாசுகள் வெடிக்க ஊர்வலமாக தர்கா வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தர்காவில் திருக்கொடியை வைத்து சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு கொடிமரத்தில் குர்ஆன் மந்திரங்கள் ஓதி ஏராளமான முஸ்லிம் பெருமக்கள் முன்னிலையில் கொடிமரத்தில் திருக்கொடியானது ஏற்றப்பட்டது.
சந்தன குட உருஸ் உற்சவ விழாவின் முக்கிய விழாவான சந்தன குட ஊர்வலம் வரும் ஞாயிற்றுக்கிழமை 20ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
No comments
Thank you for your comments