Breaking News

குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் பெறுவதாற்கான கால அவகாசம் நீட்டிப்பு

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் பெறுவதாற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்து  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். 

ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாத்த்திற்குள் குழந்தையின் பெற்றா அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 

ஆகவே குழந்தை பிறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்குப்பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200 தாமதக்கட்டணம் செலுத்தி குழந்தயின் பெயர் பதிவு செய்திடலாம் 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.

இந்திய தலைமை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கு 01.01.2000-க்கு பிறகு (15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும்) குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம். 

இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 

No comments

Thank you for your comments