Breaking News

காஞ்சபுரம் சங்கரா பல்கலையில் தொழில் நுட்பக் கருத்தரங்கம்

காஞ்சிபுரம், அக்.10

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பயன்பாட்டுத்துறை சார்பில் தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுர் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ளது சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இப்பல்கலையில் கணினி அறிவியல் பயன்பாட்டுத்துறை சார்பில் தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கம் எலைட்-2024 என்ற பெயரில் நடைபெற்றது. 

கருத்தரங்கிற்கு பல்கலையின் புலத்தலைவர் கே.வெங்கடரமணன் தலைமை வகித்தார்.கணினி அறிவியல் துறை தலைவர் வி.ரமேஷ் வரவேற்று பேசினார்.வெக்ட்ரோ டிஜிட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் எஸ்.கிருஷ்ணசாமி கருத்தரங்கை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து இணையம் மற்றும் இணையவலை பாதுகாப்பு என்ற தலைப்பில் பேசினார்.

பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலையின் புல முதல்வர் கே.வெங்கட்ரமணன் பரிசுகளை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.முன்னதாக கருத்தரங்கை கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது.

No comments

Thank you for your comments