Breaking News

காஞ்சிபுரத்தில் மொத்த வாக்காளர்கள் 13,55,188. வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்

காஞ்சிபுரம்,  அக்.29:

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார். மொத்த வாக்காளர்கள் 13,55,188 எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கலைச்செல்வி மோகன் வெளியிட்டார். ஆட்சியர் வெளியிட அதனை மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி,ஸ்ரீ பெரும் புதூர் கோட்டாட்சியர் ஐ.சரவணக்கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,58.818, பெண் வாக்காளர்கள் 6.96,153,இதர வாக்காளர்கள் 217 பேர் உட்பட மொத்தம் 13,55,818 வாக்காளர்கள் உள்ளனர். 

இன்று 29 ஆம் தேதி முதல் வரும் நவம்பர் 28 ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும். நவம்பர் 16,17 மற்றும் நவம்பர் 23,24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல்,திருத்தம் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments