காங்கிரஸ் மத நல்லிணக்க ஊர்வலம்
காஞ்சிபுரம், அக்.2:
காஞ்சிபுரத்தில் காந்தி ஜெயந்தி,முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் மற்றும் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மத நல்லிணக்க ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு காஞ்சிபுரம் மாநகராட்சியின் நகர் தலைவர் நாதன் தலைமை வகித்தார்.மாநகராட்சி துணை மேயர் ஆர்.குமரகுருநாதன் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தை காஞ்சிபுரம் முன்னாள் எம்பியும்,தெலுங்கானா மாநில கட்சிப் பொறுப்பாளருமான பெ.விஸ்வ நாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மாநகராட்சி பழைய அலுவலகம் அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பாக வந்து நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்கள். ஊர்வலத்தில் மாநில நிர்வாகிகள் பத்மனாபன்,கன்னியப்பன்,லியாகத்ஷெரீப்,மாவட்டப் பொறுப்பாளர் சீனிவாசராகவன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments