"ரத்தன் டாடா என்பது ஒரு பெயரல்ல அத்தியாயம்" - டாக்டர் கா.குமார் புகழஞ்சலி
ரத்தன் டாடா மறைவுக்குப் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக ஆசிரியருமான டாக்டர் கா.குமார் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்,
"ரத்தன் டாடா இந்திய தொழில்துறையின் வடிவமைப்பை மாற்றிய சாதனையாளராகவும், சிறந்த வழிகாட்டியாகவும் அமைந்தார். அவர் பொருளாதார முன்னேற்றம் மட்டுமன்றி, சமூக முன்னேற்றத்தையும் முக்கியமாகக் கருதிய ஒரு அற்புதமான மாமேதை". அவர் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
டாடா குழுமத்தின் ஊடாக அவர் இன்றைய தலைமுறைக்கு அளித்த தொழில்முறையான வழிகாட்டுதல்களும், தொழில் வளர்ச்சியில் அவரின் தொலைநோக்குப் பார்வையும் இந்தியா முழுவதும் வியக்கத்தக்கது.
அவரின் தலைமையின் கீழ் பல புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர் தொழில்துறையிலும், வாழ்க்கையில் மனிதநேயத்தையும் முக்கியமாகக் கருதி செயல்பட்டவர்.
"ரத்தன் டாடா என்பது ஒரு பெயரல்ல, இந்திய தொழில் வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயம்". அவரது அறச்சிந்தனைகள், சமூகப் பொறுப்புகள், தொழில்துறை வளர்ச்சிக்கு அவரால் ஏற்பட்ட தாக்கம் என்றென்றும் புகழ் பெறும்.
தொழில்முறையின் அளவுகளில் மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்பினைக் கொண்ட செயல்களில் அவர் நம் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
ரத்தன் டாடாவின் மறைவு நம் நாடு மட்டுமல்ல, தொழில் மற்றும் சமூகப் பொறுப்பினை மதிக்கும் ஒவ்வொரு நபருக்கும் பேரிழப்பாகும். அவர் மிகுந்த நேர்மையும் நம்பிக்கையையும் கொண்ட மகானவர். இவரது சாதனைகளும் சமூகத்தில் அவர் விதைத்த நல்லொழுக்கமும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும்.
அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக தொழிலதிபர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments