Breaking News

எஸ்.எல்.வி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனைகளுக்கு சலுகைகள் வழங்கி வருகிறது....

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இயங்கி வரும்  SLV மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி பொது மக்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனைகளுக்கு சலுகைகள் வழங்கி வருகிறது.


அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் மார்பக புற்றுநோய் கட்டிகளுக்கு சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள்  நடத்தப்படுகிறது.இதுகுறித்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஆ சுரேஷ் வெங்கடாசலம் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக கருதி மார்பக புற்றுநோய் நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.மார்பக புற்றுநோய் கட்டியை ஆரம்பத்திலேயே கண்டறிந்தோமானால் முழுவதுமாக குணப்படுத்த முடியும் .மேலும் கூறுகையில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மேலும் ஆண்டுதோறும் மேமோகிராம் எனும் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் இதன் மூலமாக மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த முடியும் மேலும் மார்பக புற்றுநோய் கட்டியின் அளவு ஒரு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்.



எங்களது எஸ்எல்பி மருத்துவமனையில் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய வழியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து வருகிறோம்.மேலும் தெரிவிக்கையில் நாங்கள் மார்பக புற்று நோய்க்காக மார்பகத்தை அகற்றுவது முற்றிலுமாக தவிர்த்து வருகிறோம். என்று தெரிவித்தார்.



மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்காக கிமோபோர்ட் உள்வைப்பை 2004 ஆம் ஆண்டில் இருந்தே அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ சுரேஷ் வெங்கடாசலம்  தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உடன் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர் ...

No comments

Thank you for your comments