வடகிழக்கு பருவமழை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சி, ராயப்பன் நகரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வரதராஜபுரம் ஊராட்சி, அஷ்டலட்சுமி நகரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு மீட்பு பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படகுகளையும், சிக்கராயபுரம் ஊராட்சியிலுள்ள கல்குவாரி நீர் தேக்கத்தினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குன்றத்தூர் நகராட்சி பகுதியில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் 5 கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, கர்ப்பிணிப் பெண்களிடம் மருத்துவ வசதிகளை பற்றியும், சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்கள். தொடர்ந்து குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள, சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு, நீரின் கொள்ளளவு விவரங்களை அதிகாரிகளிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் கேட்டறிந்தார்கள்.
இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments