காஞ்சிபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார்,ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம்,அக்.15:
இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 11 அரசு அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் பருவமழைக் காலங்களில் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
பெருமழையின் போது மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க 20 படகுகள் குன்றத்தூர்,மாங்காடு மற்றும் வரதராஜபுரம் பகுதிகளில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் மீட்பு படையில் உள்ள இரு அணியை சேர்ந்த 50 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்பு பணியில் ஈடுபட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.மாநில பேரிடர் மீட்பு படையினர் 51 பேர் தயார் நிலையில் குன்றத்தூர் பகுதியில் உள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பயிற்சி பெற்ற 43 அலுவலர்கள்,79 மீட்பு பணி அலுவலர்கள்,974 முதல் நிலை பொறுப்பாளர்கள்,பயிற்சி பெற்ற ஆப்தமித்ரா குழுவைச் சேர்ந்த 500 தன்னார்வலர்களும்,120 என்சிசி மாணவர்களும் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
இவர்களைத் தவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களான ஜெனரேட்டர்கள்,மரம் அறுக்கும் இயந்திரம் 30,மணல் மூட்டைகள் 250. சவுக்கு கம்புகள் 15180,டார்ச் லைட்டுகள் 1400 ஆகியனவும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1199.64 கி.மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுபாலங்கள் 2585,பாலங்கள் 38 சுத்தம் செய்யப்பட்டுள்ளது.நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாலாறு வடி நில கோட்டத்தில் 46.கீ.மீ.மற்றும் கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தில் 30.15 கி.மீ.ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய்கள், நீர்வெளியேறும் கால்வாய்கள், நீர் நிலைகளில் உள்ள நீர்வரத்து தங்கு தடையின்றி வெளியேற கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும் முடிவு பெற்றுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 62 நிரந்தர நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.மேலும் கூடுதலாக 1609 தற்காலிக முகாம்களும்,45 கால்நடைகள் பாதுகாப்பு மையங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகனின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments