பெரியகாஞ்சிபுரம் தர்காவில் முன்னாள் அமைச்சர் செஞ்சி.மஸ்தான் சிறப்புத் தொழுகை
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தர்காவில் சிறுபான்மையினர் நலத்துறை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சனிக்கிழமை கலந்து கொண்டு சிறப்புத் தொழுகை நடத்தினார்.
பெரியகாஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ளது 638ஆண்டுகள் பழையான ஹஜ்ரத் காஜா சையத் ஷாஜ் ஹமீதுத்தீன் அவுலியா பாதுஷா குத்புல் அக்தாப் சிஷ்தி தர்கா.பழையான இத்தர்காவின் திருச்சந்தனக்குடத் திருவிழா 17 ஆம் தேதி தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அக்.17 ஆம் தேதி முதல் நாள் நிகழ்வாக திருக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மறுநாள் 18 ஆம் தேதி திருக்குர் ஆன் ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 3வது நாள் விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகை நடத்தினார்.
சிறப்புத் தொழுகையில் தர்காவின் தர்மகர்த்தா எம்.முஹம்மது இம்தியாஸ் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தனக்குட உற்சவமும், திங்கள்கிழமை சந்தனக்குட ஊர்வலமும் நடைபெறுகிறது.
வரும் 22 ஆம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி தர்கா வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
No comments
Thank you for your comments