Breaking News

அமிர்தா இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்...

கோவை அமிர்தா இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்.



கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி வளாகத்தில் இன்டர்நேஷனல் செஃப் டே  தலைமை நிர்வாக அதிகாரி  சுரேஷ்குமார் மற்றும்  கல்லூரி முதல்வர் செஃப் சத்தியாநந்தன் தலைமையில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.இவ்விழாவில்  இங்கு பயிலும் மாணவர்களுக்கு சமையல் மற்றும் பேக்கிங் போட்டிகள் நடைபெற்றது போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் பிரெஞ்சு, இத்தாலியன் அமெரிக்கன் காஷ்மீரீ சைனீஸ்,செட்டிநாடு,மெக்சிகன்கோன் ஹைதராபாத்தி, ஆசியன் நோவல், மொகலை அரபிக்,சவுத் இந்தியன் போன்ற பல்வேறு நாடுகளைச் சார்ந்த சைவம் மற்றும் அசைவ உணவுகளை சமைத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை கௌரவிக்கும்  விதமாக சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கணபதி (எக்ஸிக்யூடிவ் )செஃப் கிஸ்கால் கிராண்ட், தரணிஷ் ஹெச் ஆர் எக்ஸிகியூடிவ் கிஸ்கால் கிராண்ட்,அன்பு செல்வன் தலைமை செஃப் (IBIS) லோகநாதன் அசிஸ்டன்ட் கெஸ்ட் சர்வீஸ் மேனேஜர் (IBIS) செஃப் டோமினிக் சேவியர்  எக்ஸிக்யூடிவ் செஃப் (லீ மெரிடியன்) கபில்தேவ் எக்ஸிக்யூடிவ் செஃப் ITC Welcome group  மற்றும் எம் எஸ் பிருந்தா ட்ரைனிங் மற்றும் அசிஸ்டன்ட் ஹெச்ஆர் மேனேஜர்(லீ மெரிடியன்) ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.



மேலும் அவர்களோடு வேலை வாய்ப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது அது மாணவர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடம் பயிலும் மாணவர்கள் சவுத் இந்தியன் CULINARY assosistion (SICA) வில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் இந்தியா முழுவதும் நடைபெறும் சமையல் போட்டிகள் மற்றும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அமிர்தா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. Sica வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சமையல் வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments