Breaking News

குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

காஞ்சிபுரம்,அக்.14:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 293 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

கூட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்,அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழாப் போட்டி, தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தன்று தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்கியவர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதனையடுத்து அவர்களுடன் இணைந்து குழுப்புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 

இக்கூட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு ரூ.6,92,741 மதிப்பிலான மாத ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசு ஆணையையும் ஆட்சியர் வழங்கினார்.

முன்னாள் படை வீரர் கொடி நாள் வசூலில் ரூ.5லட்சத்துக்கு மேல் நிதி வசூல் செய்த அரசு அலுவலர்களுக்கு மேதகு ஆளுநரின் பாராட்டு சான்றிதழையும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

மாவட்ட சுகாதாரப்பணிகள் பிரிவின் துணை இயக்குநர் த.ரா.செந்தில்,முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் சீனிவாசன் ஆகியோர் உட்பட அரசின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments