Breaking News

வடகிழக்கு பருவமழை நடவடிக்கை முன்னிட்டு ஒத்திகை பயிற்சி

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் தனியார் கலைக்கல்லூரியில் இன்று (14.10.2024)  வடகிழக்கு பருவமழை நடவடிக்கை முன்னிட்டு, ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கு  ஒரு நாள் பேரிடர் தொடர்பான ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே கண்டறிந்த முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் 12 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்ட ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சியினை நடத்திட திட்டமிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று ஏனாத்தூர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினைரால் பயிற்சி பெற்ற காவல் துறையினரால் பயிற்சி வழங்கப்பட்டது. 


கடந்த வருடம் பருவ மழையின்போது ஆப்தமித்ரா மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்களின் அதிக பங்களிப்பினை கருத்தில் கொண்டு இந்த வருடம் அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி வழங்கப்பட்டு அவர்களை தயார் நிலையில் வைத்திட ஏற்பாடுகள்  மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.


இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்துக் கொண்டனர்.


No comments

Thank you for your comments