மழை ஓய்ந்தது - காஞ்சிபுரத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிடும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் பாலாற்று மேம்பாலத்தில் சாலைகள் சேதமடைந்து கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் சாலை சேதமடைந்திருந்தது.இது குறித்து காஞ்சிபுரம் அன்னசத்திரம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் சாலை சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.
இச்சாலையை விரைவாக சீர் செய்யுமாறும் அவர்கள் உட்பட பொதுமக்களில் பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலாற்று மேம்பாலம் உட்பட பல இடங்களில் சேதமடைந்திருந்த சாலைகளை காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஜெசிபி இயந்திரத்தின் உதவியோடும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.பாலம் சீரமைக்கப்பட்ட போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தேசிய நெடுஞ்சாலைப் பாதுகாப்பு காவல்துறையினர் ஒழுங்கு படுத்தினர்.
No comments
Thank you for your comments