Breaking News

சரித்தரம் படைத்த எஸ்.இராகவானந்தம் 25 ம் ஆண்டு நினைவு தினம் - அதிமு கழக பொதுச்செயலாளர் பதவி வழங்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் மனதை கவர்ந்த மறைந்த எஸ்.இராகவானந்தம் அவர்களது 25-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (17.10.2024.)


திராவிட இயக்கத்தை உருவாக்கிய மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968ம் ஆண்டிலேயே தமிழ்நாடு சட்டபேரவை மேல்சபை உறுப்பினராகMLC ஆக அறிவிக்கப்பட்ட பெரும் பேறுடையவர் எஸ்.இராகவானந்தம்,

கழக நிறுவனர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆணைப்படி 1975 ம் ஆண்டு அண்ணா தொழிற்சங்க பேரவையை உருவாக்கியவர்.

1977ல் புரட்சி தலைவர் முதன்முதலாக முதலமைச்சர் பொறுப்பேற்ற அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

ஒரு வருடத்தில் 240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தர செய்திடும் சட்டத்தை கொண்டு வந்தவர். அமைப்புசாரா வாரிய சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியவர்.

அஇஅதிமுக-வின் துணைபொதுசெயலாளர், மூத்த துணை பொதுச்செயலாளர், கழக பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் உயர்ந்த பொறுப்புகளில் புரட்சித்தலைவரால் அமர்த்தப்பட்டு அழகு பார்க்கபட்டவர்.

கழகம் துவக்க பட்ட அதே தினத்தில் தனது இன்னுயிர் நீத்த பெருமகனார்  இராகவானந்தம் . 

இன்று 25 ஆண்டு நினைவு தினத்தில் திராவிட இயக்கத்திற்கு அன்னார் ஆற்றிய பெரும் பணிகளை நினைவு கூர்வதுடன்.

புரட்சி தலைவர் மறைவிற்குப் பிறகு பிளவுபட்ட கழகத்தை ஒருங்கிணைக்க அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் ஆணையை ஏற்று.. புரட்சி தலைவி அம்மா அவர்களுடன் புதுதில்லி சென்று  தேர்தல் ஆணையத்திடம் நேரிடையாக  முறைப்படி இணைப்பு கடிதத்தை இணைந்தளித்து கழகத்தை அன்றைய தினம் மீட்பதற்கு இரட்டை இலையை காப்பதற்காக பங்காற்றியவர்.

பெல் இரா.தமிழரசன்

தந்தையின் வழியில் பயணிக்கவேண்டும் என்று அவரது மகன் பெல் இரா.தமிழரசன், அண்ணா தொழிற்சங்க பேரவையில் மாநில துணை செயலாளராக சேவையாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments