Breaking News

காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை - கணக்கில் வராத ரூ.59 ஆயிரம் பறிமுதல்

காஞ்சிபுரம்,  அக்.23:

காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.59 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்.இந்த அலுவலகத்தில் காஞ்சிபுரம் லஞ்சஒழிப்பு டிஎஸ்பி வே.கலைச் செல்வன் தலைமையிலான போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள், உரிமம் பெற வந்தவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். இச்சோதனையில் கணக்கில் வராத ரூ.59 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

No comments

Thank you for your comments