சிறுமியிடம் நண்பர்களாக பழகி கர்ப்பமாக்கிய 3 இளைஞர்கள் - இருவர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்
காஞ்சிபுரத்தில் சிறுமியிடம் நண்பர்களாக பழகி, உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கிய 3 இளைஞர்கள்.
இருவர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்.
அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாநகராட்சி சர்வ தீர்த்த குளக்கரை மேலாண்டை தெருவை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களின் மகளான 16 வயது சிறுமி டிப்ளமோ செவிலியர் பயிற்சி படித்து வருகிறார்.
இந்த நிலையில் செவிலியர் பயிற்சி மையத்திற்கு சென்று வரும் வழியில் சிறுமியுடன் சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குலசேகரன் (26), வெங்கட், ஒலிமுகமது பேட்டை பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் (21) ஆகிய ஆட்டோ டிரைவர்கள் மூன்று பேர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
சிறுமியுடன் நெருங்கி பழகிய ஆண் நண்பர்கள் மூன்று பேரும் அடிக்கடி சிறுமியை வெளியில் அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து உள்ளனர்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பமான நிலையில், இதுகுறித்து சிறுமியின் தாய் மீனாவிற்கு தெரிய வந்ததால், தனது மகள் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகியுள்ளார் என காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து சிறுமியிடம் உல்லாசமாக பழகி கர்ப்பமாகிய குலசேகரன் ரித்தீஷ் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்றுமொரு இளைஞரான வெங்கட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments