Breaking News

ரூ.50.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை துவக்கி வைத்தார் எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து சுமார் 50.60 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் புதிய கட்டிடங்களை துவக்கி வைத்தார்.


காஞ்சிபுரம் மாநகராட்சி 5வது வார்டு -தாமல்வார் தெருவில் ரூ.18.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தி றந்து வைத்து ரேஷன் பொருள்களை வழங்கி துவக்கி வைத்தார். 

மேலும் தாமல்வார் தெருவில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை மழலையர் குழந்தைகளுடன் சேர்ந்து திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி 30வது வார்டு யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ரூ. 12.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறை கட்டிடத்தை மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் அப்பகுதியில் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் சமயலறை கூடம் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ரூ. 7.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், திமுக மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், மண்டல குழ தலைவர்கள் சசிகலா ,சந்துரு, பகுதி செயலாளர்கள் திலகர்,  தசரதன், வெங்கடேசன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஏ எஸ் முத்துச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் சிகாமணி, மாமன்ற உறுப்பினர்கள் இலக்கிய சுகுமார் ,சுரேஷ்,நிர்மலா, சரவணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments