காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு
காஞ்சிபுரம்,அக்.15:
பல்லவர் மேடு கிழக்குப்பகுதியில்
காஞ்சிபுரம் பல்லவர் மேடு கிழக்குப்பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் மகன் திலீப்குமார்(23) பூக்கட்டும் தொழிலாளியான இவர் வீட்டுக்கு அருகில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற இடத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரமேரூரில் :
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் யாதவர் தெருவைச் சேர்ந்த பலராமன் மகன் லட்சுமி நாராயணன்(44)இவர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டாரை போடும் போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக உத்தரமேரூர் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments