Breaking News

ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பு டாக்டர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் பூ மார்க்கெட் அருகில் உள்ள ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை கருத்தரங்கு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



மேலும் இந்நிகழ்ச்சியில் டாக்டர் ரெக்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது. "செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள்" பற்றிய கருத்தரங்கை ஹோட்டல் ரெசிடென்சி டவரில் வரும் செப்டம்பர் 22ம் தேதி நடத்துவதில் பெருமை கொள்கிறது என்றும்,இக்கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட எலும்பியல் துறையில் தன்னிறைவு பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள்,மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்டு, அவர்களுடைய அறிவு, அனுபவம், திறமை மற்றும் இதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாட உள்ளனர். 



மேலும் கருத்தரங்கின் ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி வெளிநாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் விரிவுரைகள்,செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோ செய்யும் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சையின் நேரடி ஒளிபரப்பு, தற்போது மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நுட்பங்கள் பற்றி கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.



அதனைத்தொடர்ந்து எலும்பியல் துறையில் உள்ள புதுமையான பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய கண்காட்சியும்,ரோபோடிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சையால் நோயாளிகள் அதிவிரைவாக,வலியின்றி குணம் அடைவதை காணலாம்,சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொண்டு, விவாதித்து சரியான சிகிச்சை முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த புரிதலை சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும் என்று ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையின் தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரெக்ஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments