நெ.4 வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம்
கோவை மாவட்டம், நெ.4 வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் செப்டம்பர் 18ம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 19ம் தேதி காலை 9.00 வரை நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட பேரூராட்சிகள் துறை உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் தலைமை தாங்கி முதல் மனுவை பெற்று துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, துணைத் தலைவர் இனியராஜ் முன்னிலை வகித்தார்கள். திமுக பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
இம்முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். நிகழ்வில் வருவாய் துறை, மின்சார துறை, குடிநீர் வாரியம், வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், தலைமை எழுத்தர் காளிதாஸ் என பலர் இருந்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினார்கள்.
No comments
Thank you for your comments