தமிழகத்தில் கபடி விளையாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது - தயாநிதி மாறன் எம்பி பேச்சு
காஞ்சிபுரம், செப்.8:
காஞ்சிபுரத்தில் தனியார் விடுதியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் அணியின் மாவட்ட அமைப்பாளர் சி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அணியின் மாநில துணைச் செயலாளர் வே.கௌதமன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளரும்,மத்திய சென்னை தொகுதி மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசியது,
திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி தொடங்கி 20 மாதங்களே ஆகியிருந்தாலும் இதுவரை 180 விளையாட்டுப் போட்டிகளை நடத்தி இருக்கிறோம். தமிழகத்தில் கபடி விளையாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
கிரிக்கெட், நீச்சல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளிலும் இளைஞர்கள் அதிகமாக பங்கேற்கிறார்கள். திருவாரூரில் ரோபோக்களை வைத்து போட்டி நடத்தினோம். அணியின் சார்பில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுத்தொகையை அதிகமாக கொடுத்து இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
திமுக சாதாரண கட்சி அல்ல,இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சி.எனவே கட்சி சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் பொதுமக்களை கவரும் வகையில் நடத்த வேண்டும், நடிகர் விஜய கட்சி தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள் என்றும் பேசினார்.
இக்கூட்டத்தில் அணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கியும் கௌரவித்தார். கூட்டத்தில் வேலூர்,ராணிப்பேட்டை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் மேலும் வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் பி.எம். குமார், படுநெல்லி பாபு, இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், மாநில வர்த்தக அணி செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்



No comments
Thank you for your comments