Breaking News

பச்சையப்பன் மகளிர் அறக்கட்டளை செயலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 காஞ்சிபுரம்   

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பச்சையப்பன் மகளிர் கல்லூரி முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவால்  துவங்கப்பட்டது. கல்லூரியில் அறக்கட்டளை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இயங்கி வருகிறது. 


இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புதிதாக இயங்கி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பணியாற்றும் அறக்கட்டளையின் செயலாளர் துரைக்கண்ணு நிர்வாக ரீதியாக வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளாமல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுவதாக முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் புகார்கள்  கூறப்பட்டு வருகிறது..

இந்த நிலையில்  இக்கல்லூரியில் கடந்த ஆண்டு இளநிலை படிப்பிற்காக ஏழை எளிய பெண்கள் அதிக மதிப்பெண் எடுத்து 20க்கு மேற்பட்ட மாணவிகள் கணித பாடப்பிரிவில் தேர்ந்தெடுத்து 45 நாட்கள் பயின்று வந்த நிலையில் அறக்கட்டளையின் செயலாளர் துரைக்கண்ணு உத்தரவின் பெயரில் 20 க்கும் மேற்பட்ட மாணவிகளை கல்லூரியில் இருந்து தனியார் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில்  நேற்று கண்டித்து காஞ்சிபுரம்  காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே பச்சைப்பன் மகளிர் கல்லூரி மேம்பாட்டு இயக்கம் சார்பில்  அறக்கட்டளை செயலாளர் துரைகண்ணுவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். முன்னாள் பேராசிரியர்கள் ஞானத்தாய் ,தங்கம், விஜயராகவன், இளங்கோவன், குமார் உள்ளிட்டவர் கலந்து கொண்டு அறக்கட்டளை செயலாளர் துரைகண்ணுவை  கண்டித்து பேசினார்கள்.

இந்த ஆர்பாட்டத்தில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி பயின்று கொண்டிருந்த மாணவிகளை டிசி கொடுத்தது, பல்கலைக்கழகம் அங்கீகாரம் கொடுத்து நடைபெற்று வந்த பட்டப்பிரிவு  வகுப்புகளை ரத்து செய்ததை  கண்டித்தும், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை செயலாளர் தன்னிச்சையாக அதிகாரப் போக்கை கண்டித்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவியின் பெற்றோர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், முன்னாள் பேராசிரியர் என பலர் கலந்து கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments