Breaking News

இயந்திர கோளாறால் காஞ்சிபுரம் அருகே அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்

காஞ்சிபுரம், செப்.9:

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பொற்பந்தல் கிராமத்தில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக அவரசமாக திங்கள்கிழமை நண்பகலில் தரையிறங்கியது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் கிராமம் அருகே பொற்பந்தல் கிராம பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென அப்பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக வயல்வெளியில் தரையிரங்கியது.

ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் இந்திய விமானப்படை அலுவலகத்துக்கு கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு ஹெலிகாப்டரில் வந்த விமானப்படை வீரர்கள் பழுதான ஹெலிகாப்டரில் இருந்த பழுதை நீக்கி சரி செய்தனர்.பின்னர் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக வானில் பறந்து சென்றது.

ஹெலிகாப்டர் தரையிறங்கியது மற்றும் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக பறந்து சென்றதையும் அருகிலிருந்த பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

இரு மாதங்களுக்கு முன்பு அதே சாலவாக்கம் பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் பழுதாகி அவசரமாக தரையிறக்கப்பட்டு பின்னர் அதை சரி செய்து விமானப்படை வீரர்கள் எடுத்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments