ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 459 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46.67 கோடி மதிப்பிலான வங்கிக்கடன்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் தனியார் திருமண மஹாலில் இன்று (09.09.2024) தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 459 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46.67 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவிகளை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்கள்.
மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது:
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களை ஒருங்கிணைத்து மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல் அக்குழுக்களுக்கு ஆதார நிதி வழங்குதல் குழு உறுப்பினர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு பெற்றுத்தருதல் மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பளித்தல், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பண்ணை சாரா தொழில்களுக்கு கடனுதவிகள் வழங்குதல், சமுதாய முதலீட்டு நிதி மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தொழில் கடன் வழங்குதல், சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு வறுமை ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 14.60 இலட்சம் ஏழை எளிய மக்கள் வாங்கிய ரூ.5 ஆயிரத்து 250 கோடி, 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.58.08 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 18,443 ஏழை எளிய மக்கள் பயன் பெற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1451 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாங்கிய ரூ.37.38 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 18,090 மகளிர் பயனடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1,17,617 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாங்கிய ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 15,88,309 மகளிர் பயனடைந்துள்ளனர். மேலும் தழிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.2,531 கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 13,515 விவசாயிகள் வாங்கிய ரூ.89.41 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா 25,329 குழுக்களுக்கு ரூ.1,591 கோடியே 74 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2024-25ல் ரூ.535 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3,697 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.178 கோடியே 19 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7,392 மகளிர் சுய உதவிக்குழுக்களும் நகர்ப்புற பகுதிகளில் 1,982 மகளிர் சுய உதவிக்குழுக்களும் மொத்தம் 9,374 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,12,880 பெண்கள் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 2021-22 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு ரூ.391.00 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 7008 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.457.95 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு ரூ.500.00 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 9567 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.513.59 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு ரூ.620.00 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரையில் 8754 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.620.20 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இதுவரையில் 25329 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1591.74 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு ரூ.535.00 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரையில் 3697 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.178.19 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற்ற விழாவில் ரூ.2,687 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கி துவக்கி வைத்துள்ளார்கள். அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 446 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 13 பயனாளிகளுக்கு ரூ.0.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் மொத்தமாக 459 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.46.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 13,37,299 தமிழநாடு முழுவதும் உள்ள குழுக்களுக்கு ரூ.77ஆயிரத்து 108 கோடியே 52 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு ரூ.35 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 2,17,179 குழுக்களுக்கு ரூ.14 ஆயிரத்து 614 கோடியே 18 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே “மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமாறு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, திருப்பெரும்புதூர் உதவி ஆட்சியர் திரு.அஷப் அலி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.மு.பிச்சாண்டி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments