பிரிமிங் இன்டர்நேஷனல் பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் திறப்பு விழா - தயாநிதி மாறன் திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறுவேடல் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் பி.எம். குமார், படுநெல்லி பி.எம்.பாபு, வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறனுக்கு பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணனின் தந்தை சின்ன பையன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரிமிங் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சி.ராதாகிருஷ்ணன், சி. கல்யாணசுந்தரம், சி. தயாநிதி மற்றும் குழுவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பாரிஸ் நகரில் நடை பெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேஷூவிற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான மேதகு தயாநிதி மாறன் அவர்கள் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன் பின்னர் வீராங்கனைக்கு பிரிம்மிங் பள்ளியின் சார்பில் ரூபாய் 25,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டது...




No comments
Thank you for your comments