களக்காட்டூர், ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் கலைசெல்வி நேரில் ஆய்வு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூர், ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூர் ஊராட்சி, விச்சந்தாங்கலில் 24 ஹெக்டர் பரப்பளவில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பயிரிடப்பட்டுள்ள பல்வேறு செடிகளின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.
பின்பு களக்காட்டூரில் முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப் பயிர்கள் பயிரிடப்பட்ட தோட்டங்களை பார்வையிட்டு, பசுந்தாள் உரப் பயிர்களினால் மண்ணிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
தொடர்ந்து, களக்காட்டூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, களக்காட்டூர் ஊராட்சியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்கள்.
பின்பு காஞ்சிபுரம் ஒன்றியம் களக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்கள்.
பின்பு, களக்காட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் ஆதார்கார்டு வழங்கல், வங்கி கணக்கு தொடங்குதல், சாதி சான்று, மருத்துவ காப்பீடு, நோய் கண்டறிதல், வன உரிமை பட்டா வழங்குதல் உள்ளடக்கிய பண்டைய பழங்குடியினருக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். இவ் ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments