கண் தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி - எம்.பி. செல்வம் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பயிற்சி செவிலியா்கள், செவிலியா்கள் பங்கேற்ற கண் தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் நெல்லுகார வீதியில் உள்ள டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடத்திய விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இதில் சங்கரா கண் வங்கி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதில், கண் தான மனித சங்கிலி விழிப்புணா்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு 100க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
நிறைவாக மனிதச் சங்கிலியில் பங்கேற்றவா்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் போக்குவரத்து சிக்னல் முதல் கச்சபேஸ்வரர் கோவில் வரை சாலை ஓரமாக நீண்ட வரிசையில் செவிலியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கலில் ஈடுபட்டு கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

.jpg)

No comments
Thank you for your comments