Breaking News

ஆளுயர கோப்பையை வென்ற வாலாஜாபாத் அகத்தியா பள்ளியின் கைப்பந்து அணியினருக்கு பாராட்டுக்கள்

செயிண்ட் ஆண்ஸ் ஆலம்னி கிளப் சார்பில் சென்னை கெருகம்பாக்கத்தில்  கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.  இதில் 10க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.  


இறுதி போட்டியில் வாலாஜாபாத் அகத்தியா பள்ளி மாணவர்களின் கைப்பந்தாட்ட குழுவினரும், சென்னை செயிண்ட் பீட்டர் பள்ளி அணியினரும் மோதினர்.  

இதில் வாலாஜாபாத் அக்த்தியா பள்ளி கைப்பந்தாட்ட அணி 11 : 6 என்ற விகிதத்தில் வெற்றி வாகை சூடியது.   வெற்றி பெற்ற அகத்தியா பள்ளி அணிக்கு ஆளுயர கோப்பையும், ரூபாய் 5,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.   

இதில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் மற்றும்  பள்ளி முதல்வர் தேன்மொழி ஆகியோர் பராட்டினர்.

No comments

Thank you for your comments