Breaking News

8 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்... குரல் வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை

8 மாதங்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் மேயர் மாநகராட்சி யுவராஜ் தலைமையில்  மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.


96 தீர்மானங்கள் மாமன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இரண்டு தீர்மானங்களை தவிர்த்து மீதமுள்ள 94 தீர்மானங்களும் நிறைவேறியதாக மேயர் அறிவித்தார்.

பெரும்பான்மையை நிரூபிக்க குரல் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து கூச்சல் எழுப்பினர்.

மாமன்ற கூட்டத்தில் திமுக அதிமுக மேயர் எதிர்ப்பு ஆதரவு என அனைத்து தரப்பினரும் கூச்சல் இட்டதால் கூட்டத்தில் உச்சம் குழப்பம் ஏற்பட்டது.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி மேயர் அறிவித்துவிட்டு சென்ற நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் கூட்டத்தில் எந்த விதமான தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments

Thank you for your comments