Breaking News

சாதித்த தமிழ்நாட்டு பெண்... பேட்மிட்டனில் வெள்ளி பதக்கம் வென்று சரித்திர சாதனை..

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி பேட்மிட்டன் ஒற்றைய பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.



மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா  இதுவரை இரண்டு தங்கம் , மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் உட்பட 10 பதக்கங்களை பெற்றுள்ளது.

இந்தநிலையில் இன்று ‌ பெண்கள் ஒற்றையர் பிரிவு SU5 பிரிவில் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யாங்கை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், இறுதி போட்டியில் மோதினார். 

இறுதிப் போட்டியில் 21-17,21-10 என்ற பள்ளியில் தோல்வியை தழுவினார்.  இறுதிப் போட்டியில் துளசிமதி தோல்வியை தழுவினாலும், இரண்டாம் இடம் பிடித்த அவருக்கு தற்பொழுது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

யார் இந்த துளசிமதி முருகேசன்?

காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(22). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயிற்று வருகிறார். மாற்றுத்திறனாளியான  இவர் பேட்மிட்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். தன் வீட்டுக்கு அருகே உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிறுவயதில் இருந்தே இவரது தந்தை இவருக்கு பயிற்சி அளித்தார். 

அரசு சார்பிலும் இவருக்கு விடுமுறை அளித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இவர் ஆசிய அளவில் நடைபெற்ற பேட்டமிட்டன் பிரிவில் வெற்றி பெற்றார்.

இவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். துளசிமதி முருகேசன் கடந்த 2022ம் ஆண்டு சீனாவின் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்றார். 

அதில் SL3-SU5 மற்றும் SU5 ஆகிய பிரிவுகளில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளார். சிறுவயதிலிருந்து தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடும், துளசிமதி வீடு முழுவதும் பதக்கங்களால் நிறைந்து காணப்படுகிறது. 

இது குறித்து துளசிமதியின் தந்தை முருகேசன் கூறுகையில் துளசிமதி சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அவர் மாற்றுத் திறனாளியாக இருந்தும் அவருக்கு பயிற்சி அளித்தேன். 

பலர் இது வேண்டாத வேலை என்றே எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் மீறி அவருக்கு பயிற்சி அளித்தேன் என்றார்.

No comments

Thank you for your comments