உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தல்
காஞ்சிபுரம் :

“நான் முதல்வன்”–உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்வு சென்ற மே மாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற 1300 அதிகமான மாணவர்கள் உயர் கல்வி வழிகாட்டி ஆளுமைகள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்கள் பல்வேறு தொழில் படிப்புகள் மருத்துவ படிப்புகள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் நேரடி சேர்க்கை நிகழ்வுகள் நடைபெற்றன.
2022-23 மற்றும் 2023-24 ஆம் கல்வியாண்டில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேராத மாணவர்களுக்கும் 10 மற்றும் 11ம் வகுப்புகள் மற்றும் கல்லூரி இடை நின்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக “உயர்வுக்கு படி” என்ற வழிகாட்டுதல் நிகழ்வு நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மேற்கண்ட மாணவர்கள் ஐடிஐ பாலிடெக்னிக் பொறியியல் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் திறன் பயிற்சிகள் போன்ற ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உயர் கல்வி படிக்க வழிவகை செய்யும் வகையில் கல்வி கடன் வசதிகள் பல்வேறு துறைகளால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் தற்போது உள்ள காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆளுமைகள் மூலம் வழிகாட்டுதல் உட்பட அரசின் பல்வேறு உயர் கல்வி வழிகாட்டும் நலத்திட்டங்கள் தொடர்பான அரங்குகள் அமைத்து வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. மேலும் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்வு முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் 1000 மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு, தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் மூலம் உயர் கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்களை பெற்றனர். மேலும் உயர் படிப்புக்கு தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும் திருப்பெரும்புதூர் ஒன்றியம், மேவலூர்குப்பம் ஊராட்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அரசு மற்றும் கல்வி நிறுவனத்தின் சார்பில் மாணவ/மாணவியர்களுக்காக உயர் கல்வி வழிகாட்டுதல் தொடர்பான பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு, உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் நடைபெறும் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாணவ/மாணவியர்கள் தலைசிறந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் மூலம் உயர் கல்வி வழிகாட்டுதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு அனைத்து மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி வெ.வெற்றிச்செல்வி, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments