Breaking News

காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நலத்திட்டம் - அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம், செப். 25:

காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.52.48 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் கூட்டுறவுத்துறை சார்பில் வங்கிக்கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.47.16 லட்சம் மதிப்பில் வங்கிக் கடனுதவிகள்,5 பயனாளிகளுக்கு ரூ.3.70 லட்சம் மதிப்பில் பயிர்க்கடனுதவிகள்,3 பேருக்கு ரூ.1.62லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்புக் கடனுதவிகள் உட்பட மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.52.48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

No comments

Thank you for your comments