Breaking News

தமிழக அரசை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

டிஜிட்டல் கிராப் சர்வே பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது பணி சுமையை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் வட்டகிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் டிஜிட்டல் முறை நில அளவீடு கண்டித்தும் பணி சுமையை கண்டித்தும், டிஜிட்டல் கிராஃப்ட் சர்வே பணிக்கு உரிய தொகை வழங்க வேண்டும். பிற மாநிலத்தை போல் டிஜிட்டல் சர்வேயர் என்று கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு உபகரணங்களை வழங்கிட வேண்டும். 

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை பண்பாடுகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இரு மாவட்ட தலைவர்கள் தியாகராஜன் மற்றும் நவீன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments