Breaking News

காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்திலேயே இனி பொது மக்கள் தைராய்டு பிரச்சினை இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.....

காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்திலேயே இனி பொது மக்கள் தைராய்டு பிரச்சினை இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம்.

அப்போலோ மருத்துவமனையில் தைராய்டு சார்ந்த பிரச்சினைகளுக்கு அளிக்கப்ப்படும் மேம்பட்ட சிறப்பு மருத்துவ அறுவை சிகிச்சைகளை பயன்படுத்தி தைராய்டு பிரச்சினைக்கு உரிய தீர்வுக் கண்டு பயனடைய வேண்டும் என காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் மருத்துவர் ராம்குமார் வேண்டுகோள் விடுப்பு.



காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் அப்போலோ தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.இம்மையத்தில் பொதுமக்களுக்கு இருதயம், நீரிழிவு, ரத்த கொதிப்பு, நரம்பியல் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அறுவை சிகிச்சை போன்ற முக்கிய சிகிச்சை தேவையிருப்பின் அப்போலோ மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். 

மேலும் இம்மையத்தில் அப்போலோ மருத்துவமனையின் அடிப்படை உடல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு  இலவசமாக உடல் நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இம்மையத்தில் சென்னை அப்போலோ தலைமை மருத்துவமனையில் கடந்த 10வருடமாக நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் மருத்துவராக பணிபுரிந்து வரும் மருத்துவர் ராம்குமார்,மாதந்தோறும் ஒரு நாள் இம்மையத்திலேயே முகாமிட்டு, தைராய்டு குறித்த பரிசோதனையை மேற்கொண்டு,அதற்கான ஆலோசனைகளை பொதுமக்களுக்கு இன்று முதல் வழங்குகிறார்.

இந்நிலையில் இது குறித்து இன்றைய தினம் காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது  நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் மருத்துவர் ராம்குமார் கூறுகையில்,

பொதுவாக அனைவருக்கும் வரக் கூடியது ஹைப்போ தைராய்டு தான் என்றும்,தைராய்டு பிரச்சினை பொறுத்தவரையில் தைராய்டு சுரப்பியில் ஆர்மோன் குறைவாக இருப்பது,ஆர்மோன் அதிமாக இருப்பது, அல்லது கட்டி இருப்பது என மூன்று வகையாக தான் ஏற்படுகிறது, இந்த ஆர்மோன் பிரச்சினைகளை மாத்திரைகள் மூலமாகவே சரி செய்து விடலாம் என்றும், கட்டி போன்ற பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சை வேண்டுமா வேண்டாம என அதற்கான உரிய பரிசோதனை மேற்கொண்டு அதன் மூலம் தீர்வுக் காணலாம் என தெரிவித்த அவர், மேலும், ஹைபோ தைராய்டு, ஹை தைராய்டு எதனால் ஏற்படுகிறது அதற்கான அறிகுறிகள் என்ன? 

இதற்கென அப்போலோ மருத்துவமனையில் வழங்கப்படும் மேம்பட்ட சிறப்பு மருத்துவ அறுவை சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கமளித்தார்.மேலும் அப்போலோ மருத்துவமனையில் தைராய்டு சார்ந்த பிரச்சினைகளுக்கு அளிக்கப்ப்படும் மேம்பட்ட சிறப்பு மருத்துவ அறுவை சிகிச்சைகளை பயன்படுத்தி தைராய்டு பிரச்சினைக்கு உரிய தீர்வுக் கண்டு பொதுமக்கள் பயனடைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது அப்போலோ மருத்துவமனையின் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் முருகன் உடனிருந்தார்.

No comments

Thank you for your comments