Breaking News

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் மற்றும் மாரத்தான் ஓட்டம் போட்டிகள் ஒத்திவைப்பு - ஆட்சியல் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடைபெற  இருந்த அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் மற்றும் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் போட்டிகள் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன்  தகவல் தெரிவித்துள்ளதாவது, 

1.     தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 28.09.2024 அன்று நடைபெறயிருந்த அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள்:-

மற்றும்

2.   மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் நிலையில் 29.09.2024 அன்று நடைபெறயிருந்த அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் போட்டிகள்:

மேற்காணும் இரண்டு போட்டிகளும் நிர்வாக காரணங்களால் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


No comments

Thank you for your comments