முதல்வர் கோப்பைக்கான கைப்பந்தாட்டத்தில் தங்கம் வென்ற வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
காஞ்சிபுரம் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடத்திய முதலமைச்சர் கோப்பை கைப்பந்தாட்டப் போட்டிகளில் வாலாஜாபாத் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பங்கேற்ற ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி மாவட்ட அளவில் முதலிடத்தை வென்றனர்.
அவர்களை காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பாராட்டினார்
மேலும் இவ்வணியில் இருந்து 8 மாணவர்கள் மற்றும் 5 மாணவியர் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணாக்கர்களை பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் பாராட்டினார்.
Post Comment
No comments
Thank you for your comments