Breaking News

குளிர்பானம் குடித்து இறந்த சிறுமியின் தந்தை மீது அவதூறு வழக்கு -குளிர்பான நிறுவனம் சார்பில் புகார்

 காஞ்சிபுரம்

செய்யார் அருகே குளிர்பானம் குடித்து இறந்த சிறுமியின் தந்தை மீது அவதூறு வழக்கு பதிவு செய்திட தூசி காவல் நிலையத்தில் புகார்

சிறுமியின் தந்தை ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க கோரி டெயிலி குளிர்பான நிறுவனம் சார்பில் புகார் மனு அளிப்பு


திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே கனிகிலுப்பை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி டெயிலி குளிர்பானம் அருந்தி தான் தனது 6வயது மகள் காவியா ஸ்ரீ இறந்ததார் என,அவரது தந்தை ராஜ்குமார் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர் மீது குற்றம் சாட்டியதால், ராஜ்குமார் மீது அவதூரு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தூசி காவல் நிலையத்தில் குளிர்பான நிறுவனத்தின் மேலாளர்   புகார் மனு கொடுத்துள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்துள்ளது கனிகிலுப்பை கிராம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் காவியா ஸ்ரீ ( 6 ). இந்த சிறுமி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அதே கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் 'டெயிலி' என்ற நிறுவனத்தின் குளிர்பானத்தை வாங்கி அருந்திய நிலையில்,சிறிது நேரத்தில் மயக்கமடைந்து அந்த சிறுமி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிர் இறந்துள்ளார். 


இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பல செய்தி தொலைக்காட்சி, செய்தித் தாள்களில் செய்தி வெளியாகியது.இதில் இறந்த 6வயது சிறுமி காவியா ஸ்ரீயின் தந்தை ராஜ்குமார் சில செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, 'எனது மகள் காவியா ஸ்ரீ டெயிலி என்ற நிறுவனத்தின் குளிர்பானத்தை அருந்தி தான் இறந்தது,குழந்தை இறப்பிற்கு மேற்கண்ட நிறவனம் தான் பொறுப்பு,இந்த நிலை வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என, அடுக்கடுக்கான தகவல்களை முன் வைத்து பேட்டி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் டெயிலி குளிர்பான நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டும்,குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பிய நிலையில்,இறந்த சிறுமி காவியா ஸ்ரீ அருந்திய குளிர்பானத்தில் எவ்வித விஷத் தன்மைய்ம் இல்லை என ஆய்வு அறிக்கை வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் டெயிலி குளிர்பான நிறுவனத்தின் மேலாளர் கனகராஜ் என்பவர்,தூசி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.அப்புகார் மனுவில், மேற்கண்ட சிறுமி எங்களது குளிர்பானத்தை குடித்து இறக்கவில்லை. சிறுமியிற்கு வேறு பிரச்சனை இருந்திருக்கிறது. அதனால் தான் சிறுமி இறந்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது. சிறுமியின் தந்தை ராஜ்குமார் எங்களது நிறுவனத்தின் பெயரையே கெடுத்து விட்டார். 

எனவே அவர் மீது அவதூரு வழக்கு தொடர வேண்டும்,எங்கள் நிறுவனத்திற்கு இறந்த காவியா ஸ்ரீயின் தந்தை ராஜ்குமார் ரூபாய் 5கோடியை ஈழபீடாக வழங்க வேண்டும் என அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வே துறையில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் உட்பட அனைத்து ரயில் நிலையத்திலும், ரயில்களிலும் இந்த நிறுவனத்தின் குளிர்பானம் தான் விற்கப்படுகிறது. இதனால் இறந்த சிறுமி தந்தையினால் எங்களது நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டினையும் முன்வைத்துள்ளார்.

No comments

Thank you for your comments