Breaking News

பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 93. 8 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் கலெக்டர் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில்  25   பயனாளிகளுக்கு ரூ.9.38 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  வழங்கி, 2521 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.



இந்நிகழ்வினை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒரு நாள் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  தலைமை தாங்கினார்.

மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து அம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில்  மனுக்கள் பெறப்படுகின்றது. 

இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. 

இன்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில், பெறப்பட்ட  184  மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரி செய்ய வேண்டும்,  மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும்,  சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரி செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள்   பெறப்பட்டுள்ளது.

நமக்கு தெரியாத சில பிரச்சனைகள் மற்றும் மக்களின் தேவைகளை  மனுக்களாக வழங்கப்பட்டுள்ளது. அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களை  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  சார்பில், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 3.84 இலட்சம் மதிப்பீட்டில்  இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 1 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 1.13 இலட்சம் மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 1  மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 1.09 இலட்சம் மதிப்பிலான பேட்டரி வீல்சேரும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்திட்டத்தின்கீழ் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 4 சவரன் தங்க நாணயமும் (நபர் ஒருவருக்கு 1 சவரன்) மற்றும் ரூ. 1.75 இலட்சம் மதிப்பிலான திருமண உதவித்தொகையும் மற்றும்

5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.99,998/- மதிப்பிலான 2024-2025 ஆம் ஆண்டிற்கு வங்கி கடன் மானியமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில்,   10 பயனாளிகளுக்கு ரூ.56,380/-மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ. 9.38 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி,   மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம்  சார்பில்,  2521 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட  கலெக்டர்  கலைச்செல்வி மோகன்,  காஞ்சிபுரம் தொகுதி எம்பி .க.செல்வம், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, திருப்பெரும்புதூர் உதவி ஆட்சியர் அஷப் அலி,மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments