காஞ்சிபுரம் மத்தியக் கட்டுறவு வங்கியின் பொதுப்பேரவைக் கூட்டம்
காஞ்சிபுரம், செப்.29:
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுப்பேரவைக் கூட்டத்தினை அவ்வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் சனிக்கிழமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 110 வது பொதுப்பேரவைக் கூட்டம் அவ்வங்கியின் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து பேசுகையில்,
வங்கியின் வளர்ச்சிக்கு உழைத்த நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து பேசினார். கூட்டத்திற்கு திருவள்ளூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் ஜெ.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் அ.வெங்கட்ரமணன் வரவேற்று பேசினார்.
பொதுப்பேரவைக் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ராஜ்குமார்,இணை இயக்குநர் ஜோ.சு.கணேஷ் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் தொடக்க கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக வங்கியின் பொதுமேலாளர் டி.சீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் வங்கிகளின் வளர்ச்சி குறித்த பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
No comments
Thank you for your comments