Breaking News

அக்டோபர் - 02 காந்திஜெயந்தி தினத்தன்று கிராம சபைக் கூட்டம் - விவாதிக்க ஆட்சியர் அழைப்பு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் - அனைத்து கிராம ஊராட்சிகளிலும்  அக்டோபர் - 02 காந்திஜெயந்தி தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்றகாந்தி ஜெயந்திதினமான 02.10.2024  அன்று காலை 11.00 மணிக்கு  கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள்   குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம்   மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும்.

மேலும், கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்            திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


 

No comments

Thank you for your comments