Breaking News

நரசிம்மநாயக்கன்பாளையம்பேரூராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம்

கோவை  நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் செப்டம்பர் 18ம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 19ம் தேதி காலை 9.00 மணி வரை நடைபெற்றது.



 இம்முகாமை கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆண்டாள் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் மரகதம் வீரபத்திரன் ஆகியோர் முதல் மனுவை பெற்று முகாமை துவக்கி வைத்தார்கள். பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். 

இம்முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். நிகழ்வில் வருவாய் துறை, மின்சார துறை, குடிநீர் வாரியம், வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் என பலர் இருந்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வழங்கினார்கள்.

No comments

Thank you for your comments