Breaking News

கோவை மாவட்டம் அன்னூரில் திமுக வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம் திறப்பு விழா !


 கோவை :

கோவை வடக்கு மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொறியாளர் அணி சார்பில் டாக்டர் கலைஞர் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக திமுக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ .இராசா கலந்து கொண்டு இ-சேவை மையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

நிகழ்விற்கு வருகை புரிந்து அனைவரையும் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அம்பாள் நந்தகுமார் வரவேற்றார்.

நிகழ்வில் உடன் மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, மாவட்ட கவுன்சிலர் இ.ஆனந்தன், அன்னூர் ஒன்றிய செயலாளர்கள் ந.பழனிச்சாமி, மு.தனபாலன், பேரூர் கழக செயலாளர் இரா.பரமேஸ்வரன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராசன், பொறியாளர் அணி மாவட்ட து.தலைவர் பாலாஜி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ்குமார் மேலும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

No comments

Thank you for your comments