Breaking News

மூத்த குடிமக்களின் நலவாழ்வு வலியுறுத்தி விழிப்புணர்வு வாக்கத்தான்


கோவை :

மூத்த குடிமக்களின் நலவாழ்வு மற்றும் கண்ணியத்தை வலியுறுத்தி முதியோரை கனிவுடன் பராமரித்தல் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது

முதியோர்களின் நல வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் முதியோரை கனிவுடன் பராமரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நடைபெற்றது. இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை அதுல்யா சீனியர் கேர் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அலுவலருமான சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள், கார்ப்பரேட் பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள் உட்பட 200&க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகள் ஏந்தி முதியோர்களுக்காக ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி வந்தனர்.

இந்த வாக்கத்தானது கோவையில் மட்டும் இல்லாமல் பெங்களூர், சென்னை உள்ளிட்ட  பகுதிகளிலும் அதுல்யா சீனியர் கேர் நிறுவனம்  சார்பாக பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களில் நடைபெற்றது.

முதியோருக்கு ஆதரவாகவும் அவர்கள் மீதான அன்பும் கனிவும் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது...

No comments

Thank you for your comments