காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், செப்.1:
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு தவ்ஜீத் ஜமாஅத் சார்பில் தன்னார்வர ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் 37 வது ரத்ததான முகாம் ஒலிமுகம்மது பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் அமைப்பின் மாவட்ட மருத்துவ அணியின் தலைவர் சர்புதீன் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் காஞ்சிபுரத்தில் பணியாற்றும் போக்குவரத்து தலைமை காவலர் குமார் மற்றும் காவலர் ரமேஷ் ஆகியோர் உட்பட மொத்தம் 86 பேர் தன்னார்வத்துடன் ரத்ததானம் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி பொறுப்பாளர் தீபா தலைமையிலான குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 1480 யூனிட் ரத்தம் சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கிளையின் தலைவர் சாகுல்ஹமீது தெரிவித்தார்.
நிகழ்வில் அமைப்பின் மாவட்ட துணைச் செயலாளர் அன்சாரி ஆசிப் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments