சேலத்தில் திருமணிமுத்தாறு திருவிழா அழைப்பிதழை வெளியிட்டார் காஞ்சி சங்கராசாரியார்
காஞ்சிபுரம், செப்.10:
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கமும், திருமணி முத்தாறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து சேலத்தில் திருமணிமுத்தாறை மீட்டெடுப்பது தொடர்பாக செப்.15 ஆம் தேதி தொடங்கி செப்.26 ஆம் தேதி வரை 12 நாட்களில் 12 வகையான மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சேலம் பேர்லண்ட்ஸ் பகுதியில் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த விழா தொடர்பான அழைப்பிதழை சந்நியாசிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் சிவராமானந்தா தலைமையிலான சங்க நிர்வாகிகள் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து வழங்கினார்கள்.
திருமண அழைப்பிதழை பெற்றுக் கொண்ட சங்கராசாரியார் அதனை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டு விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் பக்தர்களை கேட்டுக் கொண்டார்.
செப்.17 ஆம் தேதி சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் திருமணி முத்தாற்றங்கரையில் அந்த ஆற்றைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆரத்தி விழாவும் நடைபெறுகிறது.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி கருத்தரங்குகள், மாநாடுகள்,பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற இருப்பதாகவும்,அமைச்சர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,தமிழ் அறிஞர்கள் உட்பட பலரும் பங்கேற்கவுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் சிவராமானந்தா தெரிவித்தார்.
அழைப்பிதழ் வெளியீட்டு நிகழ்வின் போது சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல். விஸ்வநாதனும் உடன் இருந்தார்.
No comments
Thank you for your comments