Breaking News

நல்லாசிரியர் விருது தொகை ரூ.10 ஆயிரத்தை பள்ளிக்கு வழங்கிய ஆசிரியர்கள்

காஞ்சிபுரம், செப்.10:

காஞ்சிபுரத்தில் நல்லாசிரியர் விருதுக்காக அரசு வழங்கிய ஊக்கத்தொகையினை செவ்வாய்க்கிழமை அவர்கள் பணியாற்றும் பள்ளியின் வளர்ச்சிக்கு தந்து உதவிய ஆசிரியர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.



காஞ்சிபுரம் ஒன்றியம் களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீராம்பிரசாத்.திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் செல்வக்குமார், அவளூர் அரசு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் சந்திர சேகர் இவர்கள் மூவரும் தமிழக அரசின் சார்பில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பாராட்டுச் சான்றிதழும்,ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரமும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் ஆசிரியர் ஸ்ரீராம்பிரசாத் அவர் பணியாற்றும் பள்ளியின் முகப்பில் பெயர்ப்பலகை அமைக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

இத்தொகையினை வட்டாரக் கல்வி அலுவலர்,ஊராட்சி மன்ற தலைவர்,பள்ளி மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இதே போல ஆசிரியர்கள் செல்வக்குமார்,சந்திரசேகர் ஆகிய இருவரும் அவரவர்கள் பணியாற்றும் பள்ளியின் வளர்ச்சிக்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்கள். 

ஆசிரியர்களின் மனித நேய செயலுக்கு உடன் பணிபுரியும் ஆசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் பாராட்டினார்கள்.

No comments

Thank you for your comments