காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஞ்சிபுரம், ஆக.31:
காஞ்சிபுரத்தில் பணி ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்தவர் ராஜேந்திரபாபு மனைவி கஸ்தூரி(62)இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தனது வீட்டில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.இது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி மற்றும் அவரது நண்பரான பிரபு ஆகிய இருவரும் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து வளையாபதி கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இக்கொலை வழக்கு தொடர்பாக மற்றொரு முக்கிய குற்றவாளியான காஞ்சிபுரம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரபு(52)என்பவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெறுவதை அறிந்து மருத்துவமனையிலையே அவரை கைது செய்வதாக அறிவித்து சிகிச்சை பெற காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
பணி ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கஸ்தூரியின் வீடு விற்பதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments