Breaking News

கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 60-ம் ஆண்டு வைர விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் புளியகுளம் பகுதியில் அமைந்துள்ள கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 60ஆம் ஆண்டு வைர விழாவை கொண்டாடும் விதமாக பள்ளி குழந்தைகளுக்கான மாவட்ட அளவில் கலைத்திறன் போட்டிகள் அருட்தந்தை ஆரோக்கிய ததேயுஸ் தலைமையில் நடைபெற்றது.



மாவட்ட அளவில் கலைத்திறன் போட்டியில்  கோவையிலுள்ள 25க்கும் மேற்ப்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இவ்விழாவினை பள்ளியின் முன்னாள் முதல்வர் அருட்திரு.ஏ.எல் சுந்தர்ராஜ் துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 

விழாவில் மாணவர்கள் தங்களது படைப்புத் திறனையும், கலைநயத்தையும் பறைசாற்றும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களை செதுக்கி பல்வேறு உருவங்களை உருவாக்குதல் மற்றும் ஓவியப்போட்டி,கையெழுத்துப் போட்டி உட்பட 16வகையான போட்டிகளில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


நிறைவு விழாவில் செல்வம் ஏஜென்ஸி உரிமையாளர் நந்த குமார், சிரில்வினோத்,மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்,பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.




இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கிவித்தும் உற்சாகமளித்தும் விழாவினை சிறப்பித்தனர்.




No comments

Thank you for your comments